காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருக்கிகொண்டாய்.
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.
கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன...
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.